இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து…இரு இராணுவ வீரர்கள் ஸ்தலத்தில் பலி..!!

தம்புள்ளை பக்கமுன பிரதான வீதியின் தமனயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து இராணுவ வீர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உந்துருளி ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.27 மற்றும் 28 வயதுடைய லுனுகலை மற்றும் ஹல்தோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த இராணுவ வீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.