உங்களது மின் அழுத்தி ஒரே நிமிடத்தில் தூய்மை ஆக வேண்டுமா.? இதை மட்டும் செய்தாலே போதுமாம்..!

தோசைக் கல்லில் தோசையை விட்டு,விட்டு சில நிமிடங்கள் கவனிக்காமல் வேறு ஏதோ வேலை செய்து விட்டு வந்து பார்த்தால் என்னவாகி இருக்கும்? தோசை கரிந்து போய் இருக்கும்.


அந்த தோசையை தூக்கி வீசிவிடலாம். தோசைக் கல்லில் ஒட்டி இருக்கும் கரிந்த பகுதிகளை தோசைக் கல்லை வைத்து அப்புறப்படுத்தி விடுவோம். இதே போல் அயர்ன் பாக்ஸை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்…

கவனிக்காமல் ஓரிரு நிமிடங்கள் இருந்தால் துணி கரிந்து விடும். அய்யோ கரிந்து விட்டதே என துணியை போடாமல் தூக்கி வீசுவோம். ஆனால் அயர்ன் பாக்ஸை திருப்பிப் பார்த்தால் எப்போது அதில் கருப்பு நிறம் படிந்தே இருக்கும். காலப்போக்கில் அது இன்னும் அசிங்கமாகத் தெரியும்.

அதற்கு அதை சோப்பு போட்டா கழுவ முடியும்? நிச்சயம் முடியாது. தண்ணீர் உள்ளே இறங்கும். அயர்ன் பாக்சே வேலை செய்யாமல் போய் விடும். தண்ணீர் உள்ளே இருந்து ஷாக் அடிக்கவும் வாய்ப்பு உண்டு. பின்பு எப்படி சுத்தம் செய்வது? அதை தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

அயர்பாக்ஸின் அடிப்பகுதி அதாவது நாம் துணியை தேய்க்கும் பகுதியை சோல்பிளேட் என்கிறோம். அங்கு தான் இந்த கறை இருக்கும். இதைத் தான் இப்போது சுத்தம் செய்யப் போகிறோம். இதற்கு சாதாரணமாக வீட்டில் இருக்கும் உப்பே போதும்.

ஒரு வெள்ளை டவலை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை அயர்ன் செய்யும் டேபிளின் மீது போட வேண்டும். அந்த டவலின் மேல் அப்படியே ஒரு கையளவுக்கு உப்பை எடுத்து பூப்போன்று தூவ வேண்டும்.

சாதாரணமாக உப்பு தடவிய டவலின் மேல் அயர்ன் பாக்ஸை வைத்து அயர்ன் செய்து விட்டு, சிறிது நேரம் கழித்து சோல்பிளேட்டைத் திருப்பிப் பாருங்கள். அயர்ன் பாக்ஸின் அடிப்பகுதி கறைகள் மாயமாகி இருக்கும். பின்பென்ன உங்க அயர்ன் பாக்ஸ்ம் புதிது போல் பளிச்சென இருக்கும்.