மூன்றே நாளில் உங்கள் சிறுநீரகக்கல் கரைய வேண்டுமா? இதனை இப்படிச் செய்து பாருங்கள்…அசத்தும் பாரம்பரிய வைத்தியம்…!

என்ன தான் விஞ்ஞானம் அசுர வளர்ச்சியடைந்தாலும், நம் பாரம்பர்யத்துக்கு ஈடு இணையே கிடையாது. அதிலும் மருத்துவ உலகில் நம் முன்னோர்களை அறிவுச் சுரங்கம் என்றே சொல்லலாம். இன்றைக்கு சிறுநீரக கல் பலரையும் அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதற்கு அலோபதி மருத்துவத்தையே இன்றைய யூத்கள் தேடி ஓடுகிறார்கள். ஆனால், இதை நம் பாரம்பர்ய முறைப்படி ஓட வைக்க முடியும்.


இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், இந்த பாரம்பர்ய முறைப்படி 8 மில்லி மீட்டர் அளவுக்கு உள்ளாக உள்ள கல்லை மூன்றே நாள்களில் கரைத்து விட முடியும். 8 மில்லி மீட்டர் வரை சிறுநீரகக் கல்லின் அளவு உள்ளவர்கள் இதை முயற்சித்துப் பார்க்கலாம்.

முன்பெல்லாம் நம் முன்னோர்கள் பொங்கலுக்கு காப்பு கட்டியிருப்பார்கள். அதில் பூளைப்பூவும் இருக்கும். அந்த பூளைப் பூவை சூடான தண்ணீரில் காய்ச்சி, அது சுண்ட வற்றியதும் வடிகட்டிக் குடித்தாலே சிறுநீரகக் கல்லினால் ஏற்படும் வயிற்றுவலி பஞ்சாய் பறந்துவிடும்.

கோவையை சேர்ந்த மூன்றாமாண்டு கல்லூரி மாணவர் 9 மில்லி மீட்டர் அளவு சிறுநீரகக் கல்லினால் அவதிப்பட்டு வந்தார். பக்கத்து வீட்டு பாட்டி அவரிடம் பூளை பூவின் அருமை, பெருமைகளை சொல்லியிருக்கிறார்.

இவரும் தினமும் ஒருவாரத்துக்கு தண்ணீரில் பூளைப்பூவைப் போட்டு காய்ச்சி குடித்திருக்கிறார். வலி போனதோடு, அவர் ஸ்கேன் செய்து பார்த்த போது, சிறுநீரகக் கல்லின் அளவும் 3 மி.மீட்டர் தான் இருந்தது. அடுத்த ஒரு வாரத்தில் சிறுநீரகக் கல்லே இல்லாமல் போய்விட்டது.

சரி, சிறுநீரகக் கல் பிரச்னை எனக்கு இல்லை. ஆனால் வராமல் தடுக்க இப்போது என்ன செய்ய வேண்டும் என்பவர்களுக்கு, வாரம் ஒருதடவை பூளைப்பூவில் கருப்பட்டிப் போட்டு டீ குடித்து வரும் முன் காக்கலாம். நம் பாரம்பர்ய வைத்தியத்தை 8 மில்லி மீட்டருக்கு குறைவான அளவில் கல் உள்ளவர்கள் முயற்சிக்கலாமே?