வெளிநாட்டில் மிக நீண்ட காலம் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்துச் சேர்த்த தமிழருக்கு சொந்த ஊரில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

வெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணி செய்து கோடிக்கணக்கில் சொத்துச் சேர்ந்த நபர் ஊருக்கு திரும்பியதும் குடும்பத்தினரால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு குமரி என்ற மனைவியும், இரண்டும் மகன்களும் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர்.ஐக்கிய அரபு அமீரகத்தில் எலக்ட்ரிகல் கேபிள் துறையில் வேலை செய்த நாகராஜன், மாடி வீடு வணிக வளாகம் உள்ளிட்ட 2 கோடி மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்து வைத்துள்ளார்.மகன்கள் இருவரும் வெளிநாட்டு வேலையில் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.38 ஆண்டுகளாக குடும்பத்திற்காக வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த நாகராஜன் தற்போது முதுமை காரணமாகச் சொந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.ஊருக்கு வந்த அவரிடம் சொத்துக்களை தங்கள் பெயரில் மாற்றித்தர மனைவியும், குடும்பத்தினரும் வற்புறுத்தியதாகத் தெரிகிறது.ஆனால், சொத்துக்களை எழுதித்தர நாகராஜன் மறுத்துள்ளார், இதையடுத்து சொத்துக்களை அபகரித்து கொண்டு அவரை வீட்டிலிருந்து விரட்டி அடித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.சொந்த ஊரில் நிம்மதியாக வாழலாம் என நினைத்த நாகராஜனுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதனால் அவர் சாலையில் சுற்றி திரிகிறார்.இது குறித்து நாகராஜன் கூறுகையில், நான் நிம்மதியாக வாழ வேண்டிய நேரத்தில் என் குடும்பத்தார் என்னை அடித்து துரத்தி சாலையில் பிச்சையெடுக்க வைத்துவிட்டனர்.நானும் எவ்வளவு தான் அவர்களை எதிர்த்து போராட முடியும் என அழுது கொண்டே கூறியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மறுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.