கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மீண்ட தமிழ் இளைஞன் இன்னுமொரு கொடிய நோயினால் பரிதாபமாகப் பலி..!!

புலம்பெயர் தேசமொன்றில் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டு உயிர் மீண்ட நிலையில் மற்றுமொரு நோய்த்தாக்கத்தால் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த யாழ்ப்பாணம் விடத்தற்பளையைச் சேர்ந்த பத்மநாதன் சிவஜீவன் (வயது 37 ) என்பவரே கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தவராவார்.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைபெற்றுவந்த நிலையில் பூரண குணமடைந்த அவர் மீளவும் சிறுநீரக நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பயனின்றி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.