புகையிரதத்தில் பயணம் செய்யும் அனைத்து அரச தனியார் பணியாளர்களுக்கும் ஓர் முக்கிய அறிவித்தல்..!

எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் தொடருந்தில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எஸ்.பொல்வத்த தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் தொடருந்துகளில் பயணிப்பதற்காக சுமார் இருபத்து ஓராயிரம் பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.இவ்வாறு பதிவு செய்தவர்களில் நேற்றைய தினம் ஏழாயிரத்து 446 பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் அரச, தனியார் பணியாளர்கள் தொடருந்தில் முன் பதிவு அடிப்படையில் பயணம் செய்ய வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.