போரினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு யாழில் இன்று கையளிப்பு..!

அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்றைய தினம் போரால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார அலுவல்கள், புனர்வாழ்வு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபா நிதியில் குறித்த வீடு அமைக்கப்பட்டுள்ளது.

சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜே/159 சங்கரத்தை துணைவி கிராம சேவையாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த வீட்டை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ருவான் வணிகசூரிய ஆகியோர் இணைந்து குறித்த குடும்பத்திடம் கையளித்துள்ளனர்.இந்த நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், உதவி அரசாங்க அதிபர் காணி எஸ்.முரளிதரன், இராணுவ உயர் அதிகாரிகள், சங்கானை பிரதேச செயலாளர் உட்பட வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி, கிராம சேவையாளர், பிரதேச செயலகஅதிகாரிகள், உட்பட இராணுவ அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.