ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…வழமைக்கு திரும்பிய ரயில் சேவை!! முழுமையான விபரங்களும் உள்ளே..

நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், இன்று (01) முதல் 33 ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தகவல் வெளியிடுகையில்,தற்போதுவரை ரயில் பயணிப்பதற்கு 19,593 பேர் முற்பதிவு செய்துள்ளனர். இன்றிலிருந்து இயங்கவிருக்கும் 33 ரயில்களில் 31,239 ஆசனங்கள் உள்ளன.முற்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களை தவிர, மேலதிக ஆசனங்கள் காணப்படுவதால் அதில் அலுலக ஊழியர்களுக்கு பயணிக்க முடியும். எனினும் அதற்காக நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாளஅட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இன்று முதல் பயணிக்கவுள்ள 33 ரயில்களில், 11 ரயில்கள் பிரதான மார்க்கங்களிலும் கரையோர மார்க்கங்களில் 11 ரயில்களும் பயணிக்கவுள்ளன.இதனை தவிர களனிவௌி மார்க்கத்தில் 6 ரயில்கள் அடுத்த வாரத்தில் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதுவொருபுமிருக்க, 5300 இற்கும் மேற்பட்ட பேருந்துகளும் அடுத்த வாரம் முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.தற்போதுவரை 4,800 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் 3,200 தனியார் பேருந்து சேவையில் ஈடுபடவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.