இலங்கை இராணுவத்தில் இரு முறை இணைய முயன்று நிராகரிக்கப்பட்ட இளைஞனுக்கு அமெரிக்காவில் தேடி வந்த அதிஷ்டம்..!!

இலங்கை இராணுவத்தில் இணைவதற்கு இரண்டு முறை முயற்சித்தும், பலனில்லாத நிலையில், அந்த இளைஞன் இப்பொழுது அமெரிக்க இராணுத்தில் இணைந்துள்ளார். விடாமுயற்சி வெற்றியளிக்குமென அந்த இளைஞன் தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.அனுஜ் பூஜித குணவர்தன என்ற இந்த இளைஞன் கொழும்பின் அசோக வித்யாலயத்தின் பழைய மாணவர் ஆவார்.அவர் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட குறிப்பு இது,

“நான் தனது பதினெட்டு வயதில் இராணுவத்தில் சேர விரும்பினேன், எனது சொந்த நாட்டில் இராணுவத்தில் இணைவேன் என விரும்பினேன். ஆனால்,எனது அடிப்படை உடற்தகுதியை கூறி வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஏனென்றால் எனக்கு சரியான எடை மற்றும் மார்பு அளவு இல்லை என்றார்கள்.மறுவருடம் மீண்டும் இராணுவத்தில் இணைய முயன்றேன். அதிலும் தோல்வியடைந்ததை தொடர்ந்து, என்னைப் பார்த்து சிரித்த மக்கள், “திரும்பி வாருங்கள், நன்றாக சாப்பிடுங்கள்” என நக்கல் செய்தார்கள். அன்று நான் மிகவும் சோகமாக வீட்டிற்கு வந்தேன்.மூன்றாவது முறையாக, சிஐடியில் சேர விண்ணப்பித்தேன். ஒரு நேர்காணல் கூட இல்லாமல், கடிதத்தில் நான் ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டேன் என்று அறிவித்தார்கள்.தொடர்ந்து மறுக்கப்பட்டதன் விளைவாக, நான் மீண்டும் பாதுகாப்புப் படைகளில் வேலைக்கு விண்ணப்பிப்பதை நிறுத்தினேன். ஆனால் நான் எப்போதும் சீருடைகளை நேசிக்கிறேன். இராணுவத்தில் சேர வேண்டும் என்ற தனது கனவை ஒருபோதும் கைவிடவில்லை.இதற்கிடையில், எனக்கு அமெரிக்கா வர வாய்ப்பு கிடைத்தது. அங்கு படிக்கும் போது, ​​இராணுவத்தில் இணைய வாய்ப்பு கிடைத்தது. இராணுவத்தின் எழுத்துத் தேர்விலும், உடற்தகுதி சோதனையிலும் தேர்ச்சி பெற்றேன்.இன்று நான் ஒரு அமெரிக்க இராணுவ உயர் தொழில்நுட்ப ஹெலிகொப்டர் பழுதுபார்ப்பவனாக பணிபுரிகிறேன். ஏ.எச் 64 அப்பாச்சி உலகின் மிக சக்திவாய்ந்த போர் ஹெலிகாப்டர் ஆகும். ”நிராகரிப்பு என்பது வாழ்க்கையில் ஒரு ஆசீர்வாதம். கனவுக்குப் பின் ஓடுங்கள். கனவுகள் நனவாகும் என்று பாருங்கள். இறுதியாக நீங்கள் வெல்வீர்கள். இது நிரந்தரமானது” என குறிப்பிடப்பட்டுள்ளது.