அடையாள அழிப்பின் ஆறாத வடுக்களுடன் யாழ். பொது நூலகம்!

1970 களின் ஆரம்பத்தில் தோன்றி வளர்ந்த பல்வேறு போராட்ட இயக்கங்கள் ஒரு பக்கமிருக்க, ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான யு.என்.பி அரசு நாட்டை ஆண்ட காலம் அது. தமிழர்கள் மீதான இனவாதம் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் நாடெங்கிலும் பற்ற வைக்கப்பட இனவாத கும்பல் தமிழர்களுக்கு எதிராக இயங்க ஆரம்பித்தது.நாட்டின் சிங்கள பகுதிகளில் வாழும் தமிழர்களையே தாக்கிக்கொண்டிருந்த இனவாதிகள்,1977 ஆம் ஆண்டில் நேரடியாக யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து தமிழ் மக்களின் சொத்துக்கள், உடைமைகளை அழித்து யாழ் நகர வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்தனர்.மீண்டும் நான்கு வருடங்களில் யாழ்ப்பாணம் எரியத் தொடங்கியது.இதன் உச்சகட்டமாக 1981 யூன் 1 இல் தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ். பொது நூலகம் 97000 இற்கும் அதிகமான புத்தகங்களுடன் எரித்து சாம்பலாக்கப்பட்டது.இதை ஏன் எரித்தார்கள்? அந்த வன்முறைகளுக்கு என்ன தான் காரணம்? போன்ற வினாக்களுக்கு பதில் தர வருகிறது இக்கொணொளி,

-Ibc tamil