சிறுகுழந்தைகள், கர்ப்பிணிப்பெண்களுக்கு முக்கிய தகவல்…திரிபோஷா உற்பத்தி நிறுவனத்திற்கு தற்காலி மூடுவிழா..!

இலங்கையின் நீர்கொழும்பு-ஜா-எல பகுதியில் உள்ள திரிபோஷா உற்பத்திச்சாலை மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், திரிபோஷா உற்பத்திக்கு கிடைக்கும் பிரதான தானிய வகையான சோளம் இன்னும் கிடைக்காத காரணத்தினாலேயே இந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பல இடங்களில் சோள உற்பத்தி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான திரிபோஷா விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.