பெண்களை நிர்வாணப் படம் எடுத்து பலாத்காரம் செய்த நபருக்கு கொரோனா!! கண்ணீர் விட்டழுத பெண் பொலிஸார்..!!

தமிழகத்தில், பெண்களை ஆபாசப் புகைப்படம் எடுத்து கைதானவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், விசாரணை நடத்திய மகளிர் காவல்நிலையமே மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சேலம் தாதகாபட்டி சீரங்கன் 4-வது தெருவை சேர்ந்தவர் லோகநாதன்(35). அழகு நிலையம் நடத்தி வந்த இவர், இங்கு விபச்சார தொழில் நடந்ததாகவும், எங்களை நிர்வாணம் படமெடுத்து மிரட்டுவதாகவும் கூறி பாதிக்கப்பட்ட 2 பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இதன்பேரில், லோகநாதன், அவரது கூட்டாளிகள் சிவா (36), பிரதீப் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். இதில், தலைமறைவான லோகநாதன் மனைவி ரூபாவைத் தேடி வருகின்றனர்.இதற்கிடையில், கைதான 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்முடிவு நேற்று காலை வந்தது. அதில் லோகநாதனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.இதனால், அவரை கைது செய்து வந்த பெண் பொலிசார் கண்ணீர் விட்டு அழுதனர். ஏனெனில், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, அதிகாலையில் தான் வீட்டிற்கு சென்றதாகவும், குழந்தைகளுடன் இருந்ததாகவும் கூறி கண்கலங்கியுள்ளனர்.மகளிர் பொலிசாருடன், சட்டம் ஒழுங்கு பொலிசாரும் சென்றிருந்தனர். கைது செய்து வந்த பிறகு அன்னதானப்பட்டி காவல்நிலையத்திலும், மகளிர் காவல்நிலையத்தில் 3 பேரையும் வைத்துள்ளனர்.தற்போது இவர்கள் அனைவரும் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 2 காவல்நிலையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. உள்ளே யாரும் வராத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கைதான லோகநாதன் உள்பட 3 பேரையும் பொலிசார் ஓமலூர் கிளை சிறையில் அடைத்ததால், சிறை அதிகாரிகள் உட்பட 81 கைதிகளும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். சிறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.