வீட்டிலிருக்கும் கெட்ட சக்திகளை கண்டுபிடிக்க உங்கள் வீட்டில் கண்ணாடியை இந்தத் திசையில் வையுங்கள்..!!

கண்ணாடி என்பது நமது வீட்டில் உள்ள ஆற்றல் சக்தியை அதிகரிக்கவும் செய்யும், அதை உடைக்கவும் செய்யும் என்று விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டிற்குள் நுழையும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் சக்தி, நம் வீட்டில் கண்ணாடி மாட்டப்பட்டிருக்கும் அமைப்பை சார்ந்தது என்று கூறுகிறது.


வீட்டில் கண்ணாடியை எப்படி வைக்க வேண்டும்?வீட்டின் படுக்கை அறையில், படுக்கை பிரதிபலிப்பதை போல கண்ணாடியை மாட்டக் கூடாது.

இதனால் அதிகமாக நோய்வாய் பட்டு எதிர்மறை ஆற்றலை பெறுவீர்கள்.வீட்டின் தலைவாசல் கதவை பிரதிபலிப்பதை போல கண்ணாடி வைத்தால், அது நம் வீட்டிற்குள் அனைத்து நேர்மறையான ஆற்றல் திறனும் நுழையுமாம்.

நம் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் சக்தி கொண்டுள்ள பொருட்களை நோக்கி, கண்ணாடியை வைத்தால், அது வீட்டில் நுழையும் எதிர்மறை ஆற்றலை விரட்டியடிக்கும்.வீட்டின் குளியலறையில் கண்ணாடி வைக்க விரும்பினால், வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். இதனால் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.வீட்டின் குளியலறையை தவிர்த்து, மற்ற இடங்களில் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி கண்ணாடியை வைக்கக் கூடாது. ஏனெனில் அது நேர்மறையான ஆற்றல்களை எடுத்துச் சென்று விடும்.

அலுவலகத்தில் கண்ணாடியை எப்படி வைக்க வேண்டும்?அலுவலகத்தில் நேர்மறையான ஆற்றல் திறன்களை கொண்டு வர கண்ணாடியை அலுவலகத்தின் பண பெட்டகத்தை நோக்கி வைக்கலாம்.குறுகிய பாதையில் கண்ணாடி வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது எதிர்மறை ஆற்றல் திறனை அதிகரிக்கும்.அலுவலகத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ள ஜன்னலுக்கு எதிர்புறமாக ஒரு கண்ணாடியை வையுங்கள். இதனால் அது நேர்மறையான ஆற்றல் திறனை அதிகரிக்கும்.