எட்டு மாதக் குழந்தையை கருவில் சுமக்கும் கணவன்..!! வயிற்றை முத்தமிடும் மனைவி..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

குழந்தையை கருவில் கணவன் சுமக்க மனைவி கணவனின் வயிற்றை முத்தமிடும் அழகிய புகைப்படம் இணையத்தை கலக்கிவருகிறது.

இந்த வித்தியாசமான ஜோடிகள்.. கணவர் Esteban Landrau பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். மனைவி Danna Sultana பிறக்கும்போது ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர்.இருந்தாலும், இவர்கள் இன்றளவும் அறுவை சிகிச்சை செய்து தங்கள் இனப்பெருக்க உறுப்புகளை அகற்றிக்கொள்ளவில்லையாம். அதனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஜோடி, இயற்கையாகவே கருவுற்றிருக்கிறார்கள்.எட்டு மாத கர்ப்பமாக இருக்கும் Esteban-க்கு ஒரு நாள் திடீரென இடுப்பு வலி வர, உடனே தனக்கு குழந்தை பிறக்கப்போவதாக எண்ணி, உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்.
ஆனால், எட்டு மாத கர்ப்பகாலத்தில் இதெல்லாம் சகஜம், இது போலி இடுப்பு வலி என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களாம் மருத்துவர்கள்.தங்களுக்கு குழந்தை பிறந்தால் Ariel என்று பெயர் வைக்கப்போவதாக சொல்லி உணர்ச்சி வசப்படுகிறார்கள் இந்த வித்தியாசமான தம்பதியர்கள். இந்தப் புகைப்படமானது இணைய ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.