கொரோனா சந்தேகத்தின் பெயரில் இன்று அதிகாலை இருவர் யாழில் அனுமதி..!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் இருவர் கொரோனா சந்தேகத்தின் பெயரில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் எடுப்பட்டிருப்பதாக பணிப்பாளர் கூறியிருக்கின்றார். குறித்த இருவரும் இன்று அதிகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அனுமதிக்கப்பட்டவர்கள் இருவரும் ஆண்களே. இதில் ஒருவர் வடமராட்சியையும் இன்னொருவர் கோப்பாய்ப் பகுதியையும் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.