நம் முன்னோர்கள் துளசியை வணங்கியது ஏன் தெரியுமா? எண்ணற்ற நன்மைகளாம்

இந்து மதத்தில் துளசி செடி புனிதமாக கருதப்படுகிறது. புராணங்களின் துளசி பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது.பெருமாளை இடைவிடாது வணங்கி கொண்டிருப்பவள் துளசி, அவளின் இன்னொரு வடிவமே பூமியில் உள்ள துளசிச் செடி என்று கூறுவார்கள்.


கோவில்களில் கிருஷ்ணர், பெருமாள், அனுமான் போன்ற கடவுள்களுக்கு துளசியிலான மாலையைதான் அணிந்து வழிபடுவார்கள் பக்தர்கள்.அவ்வளவு சிறப்பு வாய்ந்தது துளசி. அதனால்தான் வீட்டில் துளசி செடியை வளர்த்து வணங்குவார்கள்.துளசி செடியின் தாயகம் இந்தியாதான். இவை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பரவலாக காணப்படுகிறது.

இந்த செடி 50 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியவை. குறைந்த விலையில் எளிதாக கிடைக்கும் துளசிசெடியில் மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை இழுத்து ஆக்சிஜனை வெளியேற்றுகிறது. மற்ற தாவரங்களை ஒப்பிடுகையில் துளசி செடிக்கு வித்தியாசம் இருக்கிறது.

வளிமண்டலத்தில் உள்ள மாசுக்களை சுத்திகரிக்கின்றது. அதனால் சுத்தமான காற்று நமக்கு கிடைக்க துளசி செடி வழிவகை செய்கிறது.துளசியின் மற்றொரு பெயர் பிருந்தை. நூற்றுக்கும் மேற்பட்ட துளசி வகைகள் உள்ளன. இதில் வெண்துளசிதான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. துளசி செடியின் பயன்களை பார்ப்போம்…

துளசி செடி அதிகம் உள்ள இடங்களில் கொசுக்கள் வராது. தினமும் துளசியை மென்று தின்றால் வயிற்றுப் பிரச்சினைகள் சரியாகும்.துளசி சாறுடன், தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் சளி, இருமல் குணமாகும்.

10 துளசி இலையை சூடு தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வர உடல் எடை வெகுவாக குறையும். துளசி இலையை தினமும் மென்று தின்று வந்தால் வாய் துர்நாற்றம் சரியாகும்.