சர்க்கரை நோயினால் காலில் புண்களா? இந்த இலை மட்டும் போதும்

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள்.அதற்கெல்லாம் அவசியமே இல்லை. இந்த இலை பூசினால் போதும். எப்பேற்பட்ட புண்களையும் சரிசெய்து விடும்.

ஆவாரம் பூ கடுமையான வறட்சியில் கூட வளர கூடிய ஒரு மருத்துவ தாவரம். இதன் இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்தும் மருத்துவ குணம் கொண்டது.

“ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” என்று ஒரு பழமொழி இருக்கிறது. அந்த அளவுக்கு ஆவாரம் பூ உடலில் உள்ள நோய்களை குணப்படுத்த கூடிய மருத்துவ குணங்களை கொண்டது.

ஆவாரம் பூவில் அதிக அளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அடங்கியுள்ளன. டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளாவனாய்டுகள், சபோன்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஸ்டீராய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன.

புதிய ஆவாரம் பூக்கள் சருமத்தில் ஏற்படும் பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுக்களுக்கு எதிரியாக விளங்குகிறது. இதனை சருமத்தின் மீது தடவலாம் அல்லது தேநீராகவும் பருகலாம்.

குழிப்புண்ணுக்கு ஆவார பூவின் மருத்துவ குணம்:ஆவார பூவின் இலையை அம்மியிலோ, மிக்ஸியிலோ அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிட வேண்டும்.இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.