கட்டுநாயக்கவில் 20 அடி நீளமான சுரங்கப் பாதை..!!

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள் வரும் அனைத்து விமான பயணிகளும் 20 அடி நீளமான சுரங்க பாதை வழியாக அழைத்து வந்து, முற்றாக நுண்ணுயிர் தொற்று நீக்கும் மருந்து தெளித்து சுத்தப்படுத்திய பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.இப்படியான நடவடிக்கையின் போது, தவறுதலாக எந்த பயணியும் விடுப்பட மாட்டார் எனவும் அனைத்து நுண்ணுயிர்களை அழிக்கக் கூடிய நாசனிகள் இந்த சுரங்கப் பாதையில் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.விமானப் படையினரின் உதவியுடன் இந்த சுரங்க பாதையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விமான நிலைய ஊழியர்கள் உட்பட அனைவரும் இந்த சுரங்க பாதை வழியாக நுண்ணுயிர் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.