கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் சீனா நோக்கி ஐரோப்பாவிருந்து பறந்த முதல் விமானம்..!!

சுமார் 200 பயணிகளுடன் முதல் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிழக்கே துறைமுக நகரமான தியான்ஜினில் இன்று தரையிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மீண்டது சீனா. எனினும், ஐரோப்பிய நாடுகள் பல தற்போது திணறிக் கொண்டிருக்கின்றன.

கொரோனாவிலிருந்து மீண்டதன் பின்னர் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் பரவுவதால் அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் நுழைய சீனா பெருமளவில் தடை விதித்துள்ளது.இந்தநிலையில், சுமார் 400 ஜேர்மன் மேலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தனி விமானங்களில் சீனா திரும்பத் தொடங்கியுள்ளனர்.ஜேர்மனியின் தூதரகம் மற்றும் விமான நிறுவனமான லுஃப்தான்சா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பிராங்பேர்ட்டிலிருந்து சீன வணிக மையங்களான தியான்ஜின் மற்றும் ஷாங்காய்க்கு இரண்டு விமானங்களை சீனாவில் உள்ள ஜேர்மன் வர்த்தக சபை ஏற்பாடு செய்தன.ஐரோப்பாவிலிருந்து சீனாவிற்கு வெளிநாட்டினரை திருப்பி அனுப்பும் முதல் விமானங்கள் இதுவாகும்.200 பயணிகளுடன் முதல் விமானம் தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிழக்கே துறைமுக நகரமான தியான்ஜினில் இன்று தரையிறங்கும். இரண்டாவது விமானம் ஜூன் 4 வியாழக்கிழமை மதியம் ஷாங்காயில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.