இலங்கையில் பெய்த விசித்திர மழை.!! பெரும் வியப்பில் பொதுமக்கள்..!

மலையகம் இரத்தினபுரியில் மஞ்சள் நிறத்திலாலான திரவச் சொட்டுகள் விழுந்ததாக மக்கள் தெரவித்துள்ளனர்.

இரத்தினபுரி கொடகவெல பிரதேச சபைக்கு அருகில் நேற்றுப் பிற்பகல் 1.30 மணியவில் இவ்வாறு மஞ்சள் நிறத்திலாலான திரவ சொட்டுகள் விழுந்ததாக அப்பிரதேச மக்கள் தெரவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் 10 பெர்சஸ் காணி முழுவதும் இந்த திரவ சொட்டுகள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.5 – 10 நிமிடங்கள் வரையில் இவ்வாறு மஞ்சள் நிறத்தில் திரவ சொட்டுகள் விழுந்துள்ளன.இந்த திரவ சொட்டுகள் பூமியில் விழுந்தவுடன் காய்ந்து போயுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.