இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா..!! மொத்த எண்ணிக்கை 1,558 பேராக உயர்வு..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று (29) இரவு 11.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,548 இலிருந்து 1,558 ஆக அதிகரித்துள்ளது.இன்றையதினம் (29) இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, 09 பேர் குணமடைந்துள்ளனர்.தற்போது அடையாளம் காணப்பட்டவர்கள் 10 பேரும் கடற்படையினர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய இன்றைய தினம் 17 கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 1,558 பேரில் தற்போது 794 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 754 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 10 பேர் மரணமடைந்துள்ளனர்.இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 75 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.