கொரோனா தொற்றிலிருந்து பூரண விடுதலை பெற்ற பூனை.!!

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முதலாவது செல்லப்பிராணியான பூனை ஒன்று பூரண குணமடைந்துள்ளது.பாப்பிலி என்ற பெயர் கொண்ட 9 வயது பூனை சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து அதன் உரிமையாளர் அங்குள்ள தேசிய கால்நடை பாடசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பூனைக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவில் கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து அந்த பூனைக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பிறகு பூரண குணம் அடைந்ததாக தெரிவித்தார்.இதற்கிடையில் தெற்குப் பகுதியில் உள்ள தூலிஸ் நகரில் 2வது பூனைக்கு கொரோனா தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மனிதனிடமிருந்து விலங்கிற்கு பரவுதல் என்பது சாத்தியமற்றது அல்ல, ஆனால் அது மிகவும் அரிதானது” என்றும்,”செல்லப்பிராணிகளால் மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு எந்த வழக்குகளும் இல்லை.” என்றும் ஆல்போர்ட் தேசிய கால்நடை பாடசாலையில் அறிவியல் பணிப்பாளர் ரெனாட் டிசியர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.