அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பூசகர் மீது கொடூரத் தாக்குதல்…15 பவுண் நகைகள் கொள்ளை..!!

யாழ்.சாவகச்சோி- சரசாலைப் பகுதியில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பூசகரை கண்மூடித்தனமாகத் தாக்கி வீட்டிருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றிருக்கின்றது.

அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் உறக்கத்திலிருந்த பூசகரை எழுப்பி அவர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்தியிருக்கின்றனர். இதன் பின்னர் அவரை ஒரு மூலையில் உட்காரவைத்துவிட்டு பூசகர் அணிந்திருந்த நகைகள் அடங்கலாக,15 பவுண் நகைகள், 53 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். கொள்ளையர்கள் வெளியேறிய பின்னரே பூசகர் கூச்சலிட்டபோதும் அயலவர்கள் வருவதற்கு முன்னர் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.