இலங்கை அரசாங்கத்தின் முக்கிய இணையத் தளங்கள் மீது சற்று முன்னர் சைபர் தாக்குதல்…!!

இலங்கை அரசாங்கத்தின் இரண்டு பிரதான இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுநிர்வாக அமைச்சின் இணையத்தளம் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீதே சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழீழ சைபர் படையணி என்ற பெயரிலான குழுவினால் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வான்படையின் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த இணையத்தங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடி அடங்கிய புகைப்படமொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.சைபர் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன் யாழ் பொது நூலகம் தீயிட்டு அழிக்கப்பட்டு நாளையுடன் 39 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் போதும் நாட்டில் சில அரச மற்றும் தனியார் இணையத்தளங்கள் குறித்த தரப்பினரால் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.