இலங்கையில் 3 கொரோனா நோயாளர்கள் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி..!!

இலங்கையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று கொரோனா நோயாளர்களும் குவைத் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என சுகாதார பணிப்பாளர் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இந்த நபர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக இலங்கை வந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே உறுதி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த மூவருக்கான சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக சுகாதார பணிப்பாளர் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை இலங்கையில் இதுவரை 1558 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் பெருமளவானோர் கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் ஆவர்.எனினும், இதுவரையான காலப்பகுதியில் 754 பேர் முழுமையாக குணமடைந்து வீடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.