கொழும்பு மாநகர உயர்தர மதுபான விற்பனையகங்கள் மீது விரைவில் சோதனை நடவடிக்கை.!!

கொழும்பு நகரில் இயங்கும் உயர்தர மதுபான விற்பனையகங்களை சோதனையிடும் நடவடிக்கையை கொழும்பு மாநகர சபை மேற்கொள்ளவுள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.சுற்றுலாத்துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள உணவகங்கள் இரவு 10 மணி வரை இயங்கலாம். எனினும் அவற்றில் மதுபானம் விநியோகிக்க முடியாது.இந்த உணவகங்கள் மதுபான விநியோகத்தில் ஈடுபட்டால் சமூக இடைவெளி என்ற பிரச்சினை எழும்.இந்த நிலையில் கொழும்பு நகரில் உயர்தர மதுபான விற்பனையங்கள் அல்லது உணவகங்களில் மதுபான விநியோகம் மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு சுகாதார அமைச்சின் அனுமதி தேவையாகும்.இருப்பினும், மது விற்பனையகங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேவேளை சுகாதார அமைச்சின் ஒழுங்குவிதிகளின்படி இரவு விடுதிகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.