எக்காரணம் கொண்டும் மதகுருமாருக்கு நியமனம் இல்லை…!! அரசாங்கம் வெளியிட்டுள்ள தீர்மானம்..!

அரச நிறுவனங்களில் அபிவிருத்தி அதிகாரிகள் பதவிகளுக்கு மதகுருமார்களை நியமிக்கப்போவதில்லை என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் அபிவிருத்தி அதிகாரிகளாக கடமையாற்றி வந்த 23 தேரர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிய நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இதன்போது கருத்துரைத்த அவர்,நாம் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் காலத்திற்குள் வந்து நிற்கிறோம். அனைத்தையும் வினைத்திறன் உள்ளதாக மாற்ற வேண்டிய தேவை நமக்கு உண்டு.இதற்கிடையில், எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணங்களுக்காகவும் அரச நிறுவனங்களில் அபிவிருத்தி அதிகாரிகள் பதவிகளுக்கு மதகுருமார்களை நியமிக்கப்போவதில்லை என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.