விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 51 கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா..!! மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைப்பு..!!

யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள 51 கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைகளுக்காக வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பபட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், வெலிசறை கடற்படைமுகாமைச் சேர்ந்த 300 வரையான கடற்படையினர் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில்
இவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.ஆர்.சி பரிசோதனையில் 51 கடற்படையினர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.