நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரிக்க வேண்டுமா.? தயவு செய்து அதிகாலையில் இதைக் குடியுங்கள்..!!

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸை அழிப்பதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணியில் உலகின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் தங்களின் ஆரோக்கியத்தில் முழு கவனத்தையும் செலுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் மற்றும் பானங்களை எடுக்க வேண்டியது அவசியம்.


ஊரடங்கினால் இன்று பலரும் வீட்டிலேயே சமைத்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருகிறார்கள். அதோடு பலர் கொரோனா வைரஸ் நம்மை நெருங்காமல் இருக்க நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் முயற்சியையும் எடுக்கிறார்கள். உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால், எப்பேற்பட்ட கிருமிகளும் உடலினுள் உயிர் வாழ முடியாது. அதோடு உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்ள வேண்டுமென்று கூறிவிட்டதால், நம்மை நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும்.ஊரடங்கினால் இன்று பலரும் வீட்டிலேயே சமைத்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வருகிறார்கள். அதோடு பலர் கொரோனா வைரஸ் நம்மை நெருங்காமல் இருக்க நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தும் முயற்சியையும் எடுக்கிறார்கள். உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருந்தால், எப்பேற்பட்ட கிருமிகளும் உடலினுள் உயிர் வாழ முடியாது. அதோடு உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக் கொள்ள வேண்டுமென்று கூறிவிட்டதால், நம்மை நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்:தண்ணீர் – 1 கப், துருவிய இஞ்சி – 1/4 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்,தேன் – 1 டீஸ்பூன்.

ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடுக்கும். இதில் ஆன்டி-வைரல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியுள்ளன. ஆப்பிள் சீடர் வினிகர் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இந்த குடல் பாக்டீரியாக்கள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் போன்றவை ஏராளமாக நிரம்பியுள்ளதால், இது ஒரு மருத்துவ பொருளாகவும் விளங்குகிறது. மஞ்சளை ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து கலந்து உட்கொள்ளும் போது, இவை இரண்டும் உடலினுள் உள்ள தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து உடலுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.

இஞ்சியில் ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-பயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் என பல நன்மை விளைவிக்கும் மருத்துவ பண்புகள் உள்ளது. மேலும் இதில் உடலில் தீங்கு உண்டாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸை அழிக்க உதவும் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உட்பொருட்கள் அதிகம் நிறைந்துள்ளது.

இனிப்புச் சுவையைக் கொண்ட தேன் ஒரு மருத்துவ பொருளும் கூட. இதில் உள்ள நொதிகள், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் செய்யும். மேலும் தேனில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இது உடலில் இருந்து ப்ரீ-ராடிக்கல்களை நீக்க பெரிதும் உதவி புரியும்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அத்துடன் இஞ்சி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.கலவையானது நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்து, கலவையை இறக்கி குளிர வைக்க வேண்டும்.பின்பு அதை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்க்க வேண்டும்.அதன் பின் தேன் சேர்த்து கலந்தால், பானம் குடிப்பதற்கு தயார்.

குறிப்பு: ஆப்பிள் சீடர் வினிகரை எப்போதும் கொதிக்க வைக்கக்கூடாது.ஆப்பிள் சீடர் வினிகரில் 2 நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்களான அசிட்டோபாக்டர் மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் வெப்பப்படுத்தும் போது இறந்துவிடும். ஆகவே ஆப்பிள் சீடர் வினிகரை குளிர்ச்சியான அல்லது வெதுவெதுப்பான நீருடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.எப்போதும் ஆப்பிள் சீடர் வினிகரை வாங்கும் போது மதர் என்று குறிப்பிட்டிருப்பதையே வாங்க வேண்டும். இதில் தான் புரோட்டீன் மற்றும் பாக்டீரியா அதிகம் நிறைந்துள்ளது.

இந்த பானத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்த பல பொருட்கள் அடங்கியுள்ளது. இதனால் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். அதிலும் இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலைத் தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தாக்கத்தில் இருந்து விலகி பாதுகாப்புடன் இருக்க முடியும்.