வெறும் 10 நிமிடத்தில் 100 பேருக்கு கிருமிநீக்கும் அறையைத் தயாரித்த இலங்கை மாணவன்!!

15 நிமிடத்தில் 100 பேருக்கு கிருமி நீக்கம் செய்யும் தன்னியங்கி கிருமி நீக்க அறையொன்றை உருவாக்கி, கம்புருபிட்டி தள வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.மாத்தறை உருமுட்ட பகுதியை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவன் ஒருவரும், அவரது அயல் வீட்டுக்காரரான 32 வயதான கட்டட ஒப்பந்தக்காரர் ஒருவரும் இணைந்து இதனை உருவாக்கியுள்ளனர். தன்னியங்கி முறையில் செயற்படும் இந்த கிருமி நீக்க அறையில், 10- 15 நிமிடங்களில் 100 பேருக்கு கிருமி நீக்கம் செய்யலாம்.இரண்டு கிருமிநீக்க அறைகள் நேற்று வைத்தியசாலையிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு அறைகளை உருவாக்க 400,000 – 500,000 இலட்சம் ரூபா செலவானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கையின் எந்தவொரு பகுதியையும் சேர்ந்த வைத்தியசாலை அல்லது நிறுவனம் தொடர்பு கொண்டால் கிருமி நீக்க அறையை தயாரித்து கொடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கிருமி நீக்க அறை தேவையெனில் 0777490820 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.