பிரித்தானியாவில் சிக்கித்தவித்த 221 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பல்.!!

பிரித்தானியாவில் சிக்கித்தவித்த 221 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான யூஎல் -1504 சிறப்பு விசேட விமானம் மூலம் குறித்த 221 பேரும் இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12.25 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.குறித்த அனைவரையும் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.