பரம்பரை வீட்டைப் பெற்றுக் கொள்ள சொந்த தங்கையை வெட்டிக் கொலை செய்த சகோதரி கணவனுடன் அதிரடியாகக் கைது..!!

வெல்லவாய, குடாஓயா பொலிஸ் பிரிவில் காணாமல் போயிருந்த யுவதி எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன 23 நாளின் பின்னர் காட்டுப்பகுதியில் இருந்து அவரது மண்டையோடு, தோள்ப்பை என்பன மீட்கப்பட்டுள்ளன.இந்த கொலையைச் செய்ததாக அவரது சகோதரி மற்றும் கணவன கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெலுல்ல பகுதியை சேர்ந்த 21 வயதான யுவதி கடந்த 5ஆம் திகதி காணாமல் போயிருந்தார். அது குறித்து ஊவா குடாஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.பொலிசார் நடத்திய தீவிர விசாரணையை தொடர்ந்த, யுவதியின் சகோதரி மற்றும் அவரது கணவன் இன்று மதியம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தமது சகோதரியை கொலை செய்து வீசிய காட்டுப்பகுதியை அடையாளம் காட்டினர்.அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கொல்லப்பட்ட யுவதியின் மண்டையோடு, தோள்ப்பை என்பன மீட்கப்பட்டன.பொலிசார் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர்களின் பரம்பரை வீடு கொல்லப்பட்ட சகோதரியின் பெயரிலேயே இருந்தது.அந்த வீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கொலை நடந்துள்ளது.யுவதி வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, கால்வாய் ஒன்றிற்கு அருகில் வைத்து கொட்டனால் தலையில் தாக்கி கொலை செய்து, சடலத்தை காட்டுக்குள் வீசியதாக சகோதரியும், கணவனும் வாக்குமூலமளித்துள்ளனர்.