17 மில்லியன் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கு தயாராக இருக்குமாறு தேர்தல்கள் காரியாலயத்தின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச அச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் இவ்வாறு அச்சிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே அறுபத்து ஒன்பது வாக்காளர்கள் இம்முறை தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்கு பின்னர் வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று அபாயம் காணப்படாத காலங்களில் அரச அச்சக திணைக்களத்தின் ஒரு பிரிவில் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டாலும் இம்முறை பல பிரிவுகளில் அச்சுப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன.

அச்சிடும் பணிகளின் போது கடந்த தடவைகளை விடவும் இம்முறை கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.வாக்குச் சீட்டுக்களை அச்சிட்டு முடிப்பதற்கு பத்து பதினைந்து நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் எனவும் அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.