இலங்கையில் இராண்டாவது கொரோனா அலை ஏற்படும் பேராபத்து.. மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த கொப்புகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை என்றால் கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டினுள் ஏற்பட கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.இதுவரையில் உலக சுகாதார அமைப்பு ஆசியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு இரண்டாவது கொரோனா அலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த நோயாளிகளை முகாமைத்துவம் செய்வது அத்தியாவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த நடவடிக்கைக்காக சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், சுய தனிமைப்படுத்தல், கிருமி நாசினி தெளித்தல் மற்றும் முக கவசம் அணிதல் ஆகிய சுகாதார பாதுகாப்புடன் செயற்படுதல் கட்டாயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் நபர்களுக்காக வைத்தியசாலை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் வசதிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.