உடலை மண்ணுக்குள் புதைத்து.. சுற்றிலும் தீ வைத்து.. திகில் கிளப்பும் சாமியார் பூஜை..!

மண்ணை தோண்டி உள்ளே உடம்பை புதைத்து கொண்டு, தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கிறார் ஒரு சாமியார்… தன்னை சுற்றிலும் நெருப்பை வைத்து கொண்டு, மந்திரங்களை சொல்லி பகீர் கிளப்பி வருகிறார்.. எல்லாம் கொரோனாவை ஓட்டுவதற்குதானாம்!!

கொரோனாவை ஒழிக்க உலக நாடுகளே விழிபிதுங்கி கொண்டிருக்கிறது.. ஏராளமான விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இரவு பகல் பாராமல் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.. மொத்த உலகையும் நாளுக்கு நாள் கிலியில் வைத்து வருகிறது இந்த கொரோனா.. இந்த வைரஸை உலகத்தை விட்டே விரட்ட நம் தூத்துக்குடி சாமியார் ஒருவர் தனி ஒருவராக பூஜை செய்து வருகிறார்.இவர் பெயர் ஸ்ரீனிவாசன்.. இவரது பூஜையே வித்தியாசமாகவும், விநோதமாகவும் இருக்கிறது. பிரத்தியங்கிரா தேவி என்ற கோயிலுக்கு முன்னாடி ஒரு பெரிய குழியை தோண்டி அதற்குள் இறங்கிவிட்டார்.. தலை தவிர அவரது உடம்பு முழுவதும் மண்ணிற்குள் புதைத்துக் கொண்டார்.

பிறகு தன்னை சுற்றி நெருப்பு வைத்து கொண்டு மந்திரங்களை உச்சரித்து கொண்டிருக்கிறார்.. இந்த வீடியோதான் பரபரப்பை தந்து வருகிறது.. பூமிக்குள் உடலை புதைத்துக் கொண்டு, சுற்றிலும் தீயையும் வைத்து கொண்டு, இவர் சொல்லும் மந்திரத்தால் கொரோனா உலகத்தை விட்டே ஓடிவிடுமா?! பார்ப்போம்.