முகக் கவசம் அணிவது குறித்து சுகாதார பிரிவின் முக்கிய அறிவிப்பு!!

இரண்டு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு முகக் கவசம் அணிவதை தவிர்க்குமாறு சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.கொரோனா பரவலைத் தடுப்பது குறித்த சுகாதார அமைச்சு 46 வகையான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.குறித்த ஆலோசனைகளிலேயே இந்த விடயம் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுவாசக் கோளாறு ஏற்படுவது தொடர்பாக இவ்வாறு 2 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு முகக் கவசம் அணிவதனை தவிர்க்குமாறு அதில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.