அஜீரண கோளாறுகளை போக்கும் அற்புத மருத்துவகுணம் கொண்ட சீரகம்…!!

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்கவைத்து ‘சீரகக்குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள் முழுவதும், அவ்வப் போது பருகிவர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.


சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்றல் குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.சீரகத்தைஇஞ்சி, எலுமிச்சம்பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டுவர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாகவைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக்கொள்வோம்.திராட்சைப் பழச்சாறுடன், சிறிதுசீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்தநோய் குணமாகும்.

சிறிதுசீரகம், நல்ல மிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர்வடிதல் நீங்கும்.அகத்திக் கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மனஅழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.