கொழும்பில் அடையாளம் காணப்பட்ட இன்னுமொரு கொரோனா நோயாளி..!! 200 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தல்..!

கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள கபீர் கட்டடத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 200 பாதுகாப்பு உறுப்பினர்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அந்த கட்டடத்தில் தங்கியிருந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளது.நேற்றைய தினம் PCR பரிசோதனையில் இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.அந்தக் கட்டடத்தில் இருந்த 200 கடற்படையினர் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு அவசியமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.