ரயில் நிலையத்தில் தாயார் இறந்தது தெரியாமல் தட்டி எழுப்ப முயன்ற குழந்தை!!

வட இந்திய மாநிலமான பீகாரில் உள்ள ஒரு நிலையத்தில் ஒரு குழந்தை தனது இறந்த தாயின் சேலையை மூடிக்கொண்டு விளையாடுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரின் தினசரி ஏற்படும் துன்பங்களில் மிகவும் சோகமான காட்சியாக உள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஒரு நிலையத்தில் 23 வயது பெண் ஒருவர் திங்கட்கிழமை புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயிலில் வந்திறங்கினார். அந்த பெண் தனது சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கதிஹார் சென்று கொண்டு இருந்தார்.கடுமையான வெப்பம், பசி மற்றும் நீரிழப்பு தருணங்களால் முசாபூர் ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்தார்.அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் ரெயிலில் இறந்துவிட்டதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.ரெயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் அவரது உடல் வைக்கபட்டு இருந்தது. அந்த பெண்ணுடைய சிறிய மகன் தனது தயார் இறந்தது தெரியாமல், தாயின் உடலின் மேல் போர்த்திய துணியை இழுத்து விளையாடினன் அந்த பெண்ணை எழுப்ப முயற்சித்தான்.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது