கொரோனா மருத்துவ விடுதியில் பிரித்தானியத் தாதியை கரம்பிடித்த இலங்கைத் தமிழ் மருத்துவர்.!!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் கட்டப்பாட்டு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வைத்தியரான இலங்கைத் தமிழரும், தாதியான அயர்லாந்து பெண்ணும், அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.இந்த நெகிழ்ச்சி சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

அண்ணலன் நவரத்தினம் (30), ஜான் ரிப்பிங் (34) ஆகியோரே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.தெற்கு லண்டனின் துல்ஸ் ஹில் பகுதியைச் சேர்ந்த இந்த ஜோடி முன்னதாக தமது திருமணத்தை ஓகஸ்டில் பெருமெடுப்பில் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்காக இருவரின் குடும்ப உறவினர்கள் இலங்கை, அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.எனினும், கொரோனா காலகட்டத்தில் அது சாத்தியமில்லையென்பதால் தாம் பணியாற்றும் வைத்தியசாலையில் திருமணத்தை செய்தனர்.லண்டனின் சென் தோமஸ் மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது. பாதிரியார் திருமணத்தை நடத்தி வைத்தார்.சமூக ஊடகங்கள் மூலம் திருமணம் நேரடி ஒளிபரப்பப்பட்டது.இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த போது, லண்டன் சென் தோமஸ் வைத்தியசாலையிலேயே அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.