ஆதரவற்றர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் உணவக உரிமையாளர்..!! இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு கடை முதலாளியா.?

இன்றைய கால கட்டத்தில் பல்வேறு காரணிகளால் நிர்க்கதியாகியுள்ளவர்களுக்கு இலவசமாக உணவளித்தல் என்பது எல்லோராலும் முடியாத விடயம்.இருப்பதில் ஒரு பங்கையாவது உங்களைத் தேடி வருபவர்களுக்கு கொடுத்து அவர்களின் வயிற்றுப் பசிக்கு உணவளித்தல் மிகச் சிறந்த அறமாகும்.

அந்த வகையில் இந்தக் காலத்தில் கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளர் ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவித்து அதனை தனது உணவகத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார்.இந்த கஷ்டமான காலத்திலும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்கு குறித்த உணவகம் முன்வந்திருப்பது சாலச் சிறந்தது. இதனை அறிந்த ஏழை எளிய மக்கள் தெருக்களில் நிர்க்கதியாகியிருக்கும் முதியவர்கள் தமது உணவுத் தேவைக்கு இங்கு சென்று வருகிறார்கள்.”நன்றே செய்க அதனை இன்றே செய்க’ எனும் முதுமொழிக்கு ஏற்ப மிகச் சிறந்த இந்த இலவச உணவு சேவையை செய்துவரும் உணவக உரிமையாளருக்கு அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இதனைப் பார்த்து, இன்னும் பல தனவந்தர்களும் பெரியோர்களும் நமது அழகான தேசத்தில் நிர்க்கதியான ஏழை மக்களுக்கு இவ்வாறான சிறந்த சேவைகளை வழங்க முன்வர வேண்டும் என்பது எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.