யாழ். தென்மராட்சியில் கோர விபத்து..! மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி..!

யாழ். தென்மராட்சி – மீசாலை சந்திப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.துவிச்சக்கர வண்டியில் மீசாலை சந்தி ஊடாக சிறுவன் ஒருவன் ஏ9 வீதியை கடக்க முற்பட்டுள்ளார்.இதன்போது யாழில் இருந்து கொடிகாமம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இதில், துவிச்சக்கர வண்டியில் சென்ற 11 வயதான மீசாலை தெற்கைச் சேர்ந்த தே.சச்சுதன், மோட்டார் சைக்கிளில் பயணித்த தவசிகுளம் கொடிகாமத்தைச் சேர்ந்த 18 வயதான அ.அஜேந்திரன், மிருசுவில் தெற்கைச் சேர்ந்த 18 வயதான லக்சன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.இதில், படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.