அந்த 3 பேரையும் காணவில்லை..! மறைக்கப்பட்ட வுஹான் உண்மைகள்…!! உலகையே நம்ப வைத்து காலி செய்யும் சீனா!!

கொரோனா வைரஸ் பாதிப்பு முதன் முதலில் சீனாவில் தான் துவங்கியது. ஆனால், இப்போது அங்கே நிலைமை சீராகி விட்டதாக கூறப்படுகிறது. சீனாவில் இருந்து வரும் தகவல்கள் அனைத்தும் அந்த அரசால் மட்டுமே வழங்கப்படுகிறது அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால், கொரோனா வைரஸ் தோன்றிய வுஹானின் உண்மை நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாத மர்மமாக உள்ளது. சீனா கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முன்னணியில் இருப்பதாக நம்பி பல நாடுகள் சீனாவிடம் உதவி கோரி வருகின்றன. சீனாவில் பாதிப்பு கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் எனும் இடத்தில் பரவியது. அங்கே இருந்த மக்களில் பலருக்கு மிக வேகமாக பரவியது. ஒரீரு மாதங்களில் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை சீனாவில் 80,000த்தை கடந்தது. அதன் பின் அந்த வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கும் வேகமாக பரவத் துவங்கியது. குணமானோர் எண்ணிக்கை ஆனால், சீனா பல ஆயிரம் பேர் குணமானதாக கூறியது. இதுவரை 83,269 பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 76,745 பேர் குணமடைந்து விட்டதாகவும் சீனா கூறுகிறது. அதாவது சுமார் 90 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர்.துவக்கத்தில் இந்த தகவல் மற்ற நாடுகளுக்கு பெரும் நம்பிக்கை அளித்தது. மற்ற நாடுகள் திணறல் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிய போது, சீனா போலவே சில நாட்களில் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என்றே கருதப்பட்டது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வந்ததே ஒழிய குறையவில்லை. குணமானோர் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. உதவி கேட்கும் நாடுகள் இந்த நிலையில், சீனா சரியான பாதையில் சென்று இந்த தொற்று நோயை கட்டுப்படுத்தி விட்டதாக கருதும் சில நாடுகள், சீனாவிடம் உதவி கோரி வருகின்றன. சீனாவும் பல நாடுகளுக்கு மருத்துவர்கள், உபகரணங்கள் ஆகியவற்றை அளித்து உதவி வருகிறது.

சீனா சொல்வது உண்மையா?ஆனால், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட நின்று விட்டதாக கூறப்படுவது உண்மையா? அல்லது உண்மையிலேயே வுஹானை தாண்டி கொரோனா வைரஸ் பரவவில்லை என்றாலும், அங்கே 76,000 பேர் குணமடைந்து விட்டார்களா? இந்த கேள்விகளுக்கு சீன அரசு, சீன ஊடகங்களை தாண்டி யாரும் உறுதியாக பதில் அளிக்கவில்லை. காணாமல் போனவர்கள் வுஹானில் உண்மையில் என்ன நடக்கிறது என வெளி உலகுக்கு தகவல் கூறி வந்த சீன வழக்கறிஞர் சென் கிஷி கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. அதே போல, உண்மை நிலவரத்தை வெளியிட்டு வந்த முன்னாள் பல்கலைக்கழக ஆசிரியர் சூ சியாங், பெரு வியாபாரி ரென் சிகியாங் ஆகியோரையும் காணவில்லை.சீனாவின் அடக்குமுறை சீனாவின் அடக்குமுறை உலகம் அறிந்த ஒன்று தான். உலகம் முழுவதும் இருந்து கொரோனா வைரஸ் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைநகர் பீஜிங்கில் தான் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறி பீஜிங்கை விட்டு செல்லாமல் பார்த்துக் கொள்கிறது சீன அரசு.சீனாவை நம்பினால் சீனா சொல்லும் தகவல்கள் மட்டுமே வெளி உலகுக்கு தெரியும் நிலையில், சீனா கொரோனா வைரஸை வென்று விட்டதாக கருதி மற்ற நாடுகள், அவர்களிடம் உதவி கேட்பது அல்லது சீனாவின் பாதையில் நாமும் கட்டுப்படுத்தலாம் என நினைப்பது சரியா? ஐரோப்பா நிலை இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் சடலங்களை கையாள முடியாமல் திணறும் நிலை உள்ளது.இதே போன்ற நிலை வுஹானில் கடந்த மாதம் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், இப்படி எல்லாம் நடக்கும் என எதிர்பாராத ஐரோப்பிய நாடுகள் திக்கித் திணறி வருகின்றன. சீனா முன்பே உண்மை நிலையை கூறி இருந்தால், மற்ற நாடுகள் எப்போதோ உஷாராகி இருக்கும்.சீனாவின் சதியா? சிலர் உலகத்தில் வல்லரசாக மாற சீனா கொரோனா வைரஸை பயன்படுத்துகிறது என கூறுவதையும் நாம் ஒதுக்கி விட முடியாது. சீனா உண்மையில் கொரோனா வைரஸ் வுஹானை தவிர மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து இருக்கலாம். ஆனால், வுஹானில் உண்மையில் என்ன நடந்தது என உள்ளது உள்ளபடி கூறாத வரை சீனாவை மற்ற நாடுகள் நம்புவது உலகுக்கு ஆபத்து தான்.