குழந்தைகளை கடத்தி உடலுறுப்புகளை அபகரிக்கும் மாபியா – லண்டனில் சிக்கியது

குழந்தைகளை கடத்தி உடலுறுப்புகளை அபகரிக்கும் கும்பல் ஒன்று லண்டனில் சிக்கியுள்ளது.

லண்டனில் உடல் உறுப்புகளை எடுக்கும் நோக்குடன் ஒரு குழந்தையை கடத்த முனைந்த குற்றத்தில் இரண்டு நைஜீரியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் இருந்து பிரித்தானியாவுக்குள் குழந்தையொன்றை கொண்டு வந்து, இந்த உடலுறுப்பு அபகரிப்பு சதியை செய்ய முனைந்ததாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திட்டமிட்ட வகையில் இந்தச் சதி இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ள காவல்துறையினர், தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் இன்று மேற்கு லண்டனில் உள்ள அக்ஸ்பிறிட்ஜ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் 55 வயதுடைய பெண் எனவும் மற்றவர் 60 வயதான ஆண் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டன் பெருநகர காவல்துறையான ஸ்கொட்லன்ட் நடத்திய புலனாய்வு விசாரணைகளில் இந்த உடலுறுப்பு குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், உடலுறுப்பு அபகரிக்கபடவிருந்த குழந்தை காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.