ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவை அடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்டத்தில் தாக்கல் செய்துள்ள வேட்பாளர் பட்டியல் தொடர்பில் சிக்கலான நிலைமை உருவாகியுள்ளது.


தேர்தல் சட்டத்திற்கு அமைய வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தால், மூன்று நாட்களுக்குள் வேறு ஒரு வேட்பாளரைப் பெயரிட வேண்டும்.எனினும், தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த விடயத்தில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.ஆறுமுகன் தொண்டமான் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.ஆறுமுகன் தொண்டமானின் மறைவு, பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.