தொடர்ந்து வீழ்ச்சி அடையும் இலங்கை ரூபா ! அதிகரிக்கும் டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 367.39 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி, 356.67 ரூபாவாக பதிவாகியுள்ளது.மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 389.89 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 375.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.