சட்டவிரோதமாக சொகுசு வாகனங்கள் இறக்குமதி

பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 5 சொகுசு வாகனங்கள் சுங்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளன.

ஐக்கிய இராச்சியத்தின் உதிரி பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சொகுசு கார்களே கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை சுங்கத்தின் ஒருகொடவத்தை பண்டகசாலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

வாகன உதிரிப்பாகங்கள் என்ற போர்வையில் குறித்த வாகனங்கள், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவுடி, பென்ஸ், பீ.எம்.டபிள்யூ மற்றும் ஃபியட் ஆகிய அதிசொகுசு ரக வாகனங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.