நாளை உச்சம் தொடவுள்ள எரிபொருள் விலை – வெளிவந்த விலை விபரம்

மீண்டும் எரிபொருள் விலைகள், நாளை வெள்ளிக்கிழமை(24) அதிகரிக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்களை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 74 ரூபாவினால் அதிகரிக்கும் எனவும், 95 ஒக்டோன் பெட்ரோலின் விலை 78 ருபாவினால் அதிகரிக்கும் எனவும், ஒரு லிட்டர் டீசலின் விலை 56 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 65 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 210 ரூபாவினாலும் அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சந்தையில் டொலர் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.