வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு முக்கிய தகவ‌ல்

வெளிநாடு செல்லும் நோக்கில் கடவுச்சீட்டு பெறவுள்ளவர்களுக்கு முக்கிய தகவலொன்று வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு சேவை முறைமைகளின் அடிப்படையில் ஒருநாள் சேவையூடாக கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் நாயகம் பந்துல ஹரிச்சந்திர மேலும் கூறுகையில்,

ஒருநாள் சேவையை பெறுவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எaடுக்கப்பட்டுள்ளது

தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாள் ஒன்றுக்கு 50 சதவீதமான பணிக்குழாமினரை கொண்டே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையிலிருந்து வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கு அவசர அறிவித்தலொன்று ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

பணம், கடவுச்சீட்டு அதன்படி எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர் குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.