வளர்த்த நாயைத் தேடிச்சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ஷ்டம்

தான் வளர்த்த நாய் ஒன்றை தேடிச்சென்ற அமெரிக்கர் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த லியோனர்ட் லிண்டன் (42) என்பவரே இவ்வாறு திடீர் பணக்காரர் ஆன இளைஞர் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

இந்த இளைஞன் லிவி என்ற பெண் நாயை வளர்த்து வந்தார். லிவி கர்ப்பமாக இருந்த நிலையில் அதற்கு உடல்நிலை சரியில்லை என லிண்டனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

இதையடுத்து உடனடியாக லிவியை காண வேண்டும் என்பதற்காக, எப்போதும் செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் அவசர அவசரமாக பதற்றத்துடன் லிண்டன் கிளம்பினார்.

அப்போது திடீரென Stop & Shop கடையில் வண்டியை நிறுத்திய லிண்டன் அங்கு சில பொருட்களை வாங்கியதோடு அதிஷ்ட இலாபச் சீட்டிழுப்பையும் வாங்கினார்.

அந்த சீட்டுக்கு தான் $2 மில்லியன் (இலங்கை மதிப்பில் ரூ. 72,26,64,400) பரிசு விழுந்துள்ளது.

தனக்கு பரிசு விழுந்ததற்கு தனது நாய் லிவி தான் முழு காரணம் என லிண்டன் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், இன்னும் என்னால் நம்ப முடியவில்லை, இது என் வாழ்க்கையை மாற்றும். பரிசு பணத்தில் முதலில் லிவிக்கு புதிய தங்குமிடம் வாங்குவேன் எனக் கூறியுள்ளார்.